இது மற்றுமோர் பொழுது
அடர் குமிழிகள் உலவ
சுவாச வெளியெங்கும்
ஓர் மூர்ச்சை பயணம்
அண்ட வெளிகளின்
அகோர தாண்டவம் ,
இது மாய கூட்டின்
உற்சவ நர்த்தனம் ,
உதிர்வது
காற்றின் நாதம்
கணநேர தேடல்கள்
தொலைந்த நிகழ்வுகள்
இடைச்செருகல்கள்
இன்று' ..இப்பொழுது
மீள்தல் சுகம்
ஷம்மி முத்துவேல்
எத்தனையோ தபா சொலிச்சு வேண்டாம் டீ.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது அப்படின்னு.. கேட்டேனா.. இல்லையே. திங்க, தூங்க, சினிமா பாக்க.. எதாவது ஒரு ஹீரோ வந்து என்கூட டூயட் பாடுவான்ன்னு மனசு நம்புச்சு. அப்போ பார்த்து அந்த சலீம் கடை டீ போடற பாஷா பார்த்து சிரிச்சான்.
அங்கே அக்கா ஒரு கடைல சாப்பாடு வாங்கி குடுத்துச்சு. அங்கேயே பல்லு விளக்கி சாப்டுட்டேன்.